An abstract of the early life of Our Super Star Rajinikanth’s has been included in the syllabus of 6th standard school children ….. Note that, it’s not in the state board syllabus, but CBSE Central board syllabus , under the heading ‘Dignity of Work ’……………….
Please find the book cover, contents page and section contents in order!
-
-
image78
-
-
image79
-
-
image80
-
-
image81
September 24, 2010
Posted by sivaether |
Uncategorized |
Leave a Comment
வயல்வெளிபார்த்து
வறட்டி தட்டி
ஓணாண்பிடித்து
ஓடையில்குளித்து
எதிர்வீட்டில் விளையாடி
எப்படியோபடித்தநான்
ஏறிவந்தேன் நகரத்துக்கு !

சிறுஅறையில்குறுகிப்படுத்து
சிலமாதம்போர்தொடுத்து
வாங்கிவிட்டவேலையோடு
வாழுகிறேன்கணிப்பொறியோடு !

சிறிதாய்த்தூங்கி
கனவுதொலைத்து
காலை உணவுமறந்து
நெரிசலில்சிக்கி
கடமைஅழைக்க
காற்றோடு செல்கிறேன்
காசுபார்க்க !
மனசுதொட்டு
வாழும்வாழ்க்கை
மாறிப்போகுமோ?

மௌசுதொட்டு
வாழும்வாழ்க்கை
பழகிப் போகுமோ?
வால்பேப்பர்மாற்றியே
வாழ்க்கை
தொலைந்து போகுமோ?
சொந்தபந்த
உறவுகளெல்லாம்
ஷிப்பைலாய்
சுருங்கிப்போகுமோ?
வாழ்க்கை
தொலைந்துபோகுமோ
மொத்தமும்!
புரியாது
புலம்புகிறேன்
நித்தமும்!
தாய்மடியில்தலைவைத்து
நிலவுமுகம்நான்ரசித்து
கதைகள்பேசி
கவலைகள்மறந்தகாலம்
இனிதான்வருமா?
இதயம்நனைத்த
இந்தவாழ்வு
இளையதலைமுறைக்காவது
இனி கிடைக்குமா?

சொந்த மண்ணில்
சொந்தங்களோடு
சோறு திண்பவன்
யாரடா ?
இருந்தால் அவனே
சொர்க்கம் கண்டவனடா! |
September 24, 2010
Posted by sivaether |
Uncategorized |
Leave a Comment